நெல்லை மைந்தன்

Saturday, November 19, 2005

தினமலருக்கு நன்றி

Image hosted by TinyPic.comஎன்னுடைய வலைபதிவில் இடம்பெற்றுள்ள நெல்லை அல்வா குறித்து கடந்த 14-ந் தேதி டாட்காம் பகுதியில் குறிப்பிட்டு எழுதிய தினமலர் நாளிதழக்கு நன்றி

Saturday, November 05, 2005

தென்காசி

Image hosted by TinyPic.comநெல்லையிலிருந்து 55 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது தென்காசி நகரம். இந்நகரில் சுவாமி காசி விசுவநாதராகவும். அம்பாள் உலகம்மையாகவும் காட்சி தருகின்றனர். இக்கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டதாகும்.

பராக்கரம பாண்டியன் சிவபெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன் உத்திரகாசிக்கு வருவதற்கு பதிலாக இவ்விடத்திலே தெக்கண காசியாக ஆலயம் செய்து வழிபடுமாறு கூறினான்.மன்னனும் தலம் கட்ட இடம் தேடிய போது இப்போது இத்தலத்தருகே ஓடும் சித்ரா நதியில் நந்தி கிடக்க அந்த இடத்திலேயே இறைவனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபட்டான்.1967 வரை மொட்டைக் கோபுரமாக இருந்தது.1990 ல் மிகப்பெரிய ராஜ கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் இக்கோயில் திகழ்கிறது.

கி.பி.1446 ல் பராக்கிரம பாண்டிய மன்னனால் இந்த ராஜகோபுரம் கட்டுவதை ஆரம்பித்து வைக்கப்பட்டு கி.பி.1505 ல் கட்டிமுடிக்கப்பட்டது. கி.பி.1824 வரை நல்ல நிலையில் இருந்த கோபுரம் கி.பி.1825 ல் நெருப்பினால் சிதைவுற்றதாம். கி.பி.1826 முதல் 1966 வரை பழுதுபட்ட நிலையிலேயே இருந்த இக்கோபுரம் 1966 ம் ஆண்டு அகற்றப்பட்டது.அதன்பின் 1990ல் ராஜகோபுரம் மீண்டும் கட்டிமுடிக்கப்பட்டது. இதன் உயரம் 180 அடியாகும்.பல சிற்ப கலையழகுடன் இக்கோபுரம் திகழ்கிறது.இக்கோபுரத்தின் 9 நிலையில் தென்காசியின் இயற்கை அழகைச் சுற்றிப்பார்க்க 25 அடி அகலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும். இத்தலத்தில் வணங்கினால் வடகாசியில் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.


Wednesday, November 02, 2005

பாபநாசம்

Image hosted by TinyPic.comஜPவ நதியான தாமிரபரணி மலைகளிலும், பாறைகளிலும் தவழ்ந்து சமவெளிப் பகுதியை அடையும் இடம்தான் பாபநாசம். பாபநாசம் என்றhல் மனிதர்களின் பாவங்களை போக்கும் இடம் என்று பொருள்.

தமிழ் முனியான அகத்தியருக்கு அம்மையும்-அப்பனும் திருக்காட்சி கொடுத்த இடம் இதுதான். இங்கு அகத்திய முனிவருக்கு தனிக்கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது அகத்திய முனிவர் அவரது கோயிலில் இருந்து அழைத்து வரப்படுவார். அவர் வந்து சேர்ந்தபிறகுதான் அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறும். நெல்லையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாபநாசம் திருத்தலம்.

Thursday, August 25, 2005

கிருஷ்ணாபுரம் கோவில்

Image hosted by TinyPic.com
நெல்லையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உள்ளது கிருஷ்ணாபுரம். இங்கு சுவாமி வெங்கடாசலபதி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உள்ளார்.
Image hosted by TinyPic.com
இக்கோவில் நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இக்கோவிலில் உள்ள கற்சிற்பங்கள் கலைநயத்துடன் தத்ருபமாக படைக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Tuesday, August 16, 2005

பத்தமடை பாய்

Image hosted by TinyPic.com
பாய் என்ற உடனேயே நினைவுக்கு வரும் ஊர் நெல்லை மாவட்டத்தில் உள்ள பத்தமடை ஆகும். இங்கு கலையம்சம் மிக்க பாய்கள் தயாரிக்கப்படுவதால் இவ்வூர் உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.

அழகுணர்ச்சியுடன் கலைரசனையுடன் தயாரிக்கப்படும் பாய்களில் பத்தமடைக்கு மட்டுமே தனிச்சிறப்பு. இங்கு பத்து ரூபாய் மதிப்புள்ள சாதாரண பாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக பாய்கள் வரை(பட்டுப்பாய்) தயாராகின்றன. இந்த பாய்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான கோரைப் புற்கள் குளிர்ச்சியாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

Saturday, August 13, 2005

சங்கரன்கோவில் திருத்தலம்

Image hosted by TinyPic.com
நெல்லையில் இருந்து வடக்கே 56 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சங்கரன்கோவில் திருத்தலம். இங்கு சுவாமி சங்கரநாராயணராகவும். அம்பாள் கோமதியாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறhர்கள்.இக்கோவில் 11-ம் நு}ற்றhண்டில் உக்கிரன்கோட்டையை ஆண்டு வந்த உக்கிரம பாண்டியன் என்னும் அரசனால் கட்டப்பட்டது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் ஆடித்தவசு காட்சி விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள், அம்மை-அப்பனை வழிபடுவார்கள்.

Monday, August 08, 2005

நெல்லை அல்வா

Image hosted by TinyPic.comநெல்லை என்றhலே அல்வாவுக்கு பெயர் பெற்ற ஊர். நெல்லை அல்வா உலக அளவில் புகழ் பெற அதன் தித்துக்கும் ருசியும். மணமும் ஒன்றhகும். மேலும் இங்கு தயாரிக்கப்படும் அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்று தண்ணீரும் முக்கிய காரணம் என்றhல் அது மறுக்க முடியாத உண்மை.